நடிகை ஸ்ருதி ஹாசனின் தமிழ் பொண்ணு மாஸ்க் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஸ்ருதி ஹாசன். அஜித், விஜய், சூர்யா, விஜய் சேதுபதி, விஷால் என்று மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழ் மொழியைத் தவிர தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தற்போது சலார் என்ற படத்தில் நடித்து வருகிறார். லாபம் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
இந்த நிலையில், நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், மேற்கொண்ட பரவாமல் தடுப்பதற்கு நாடு முழுவதும் லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அதோடு, முகக் கவசம், கைகளை சுத்தம் செய்தல், சானிடைசர் பயன்படுத்துதல் போன்றவற்றை கட்டாயமாக அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
சினிமா பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த அளவிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதோடு, கொரோனா தடுப்பூசி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். இந்த நிலையில், நடிகை ஸ்ருதி ஹாசன் மாஸ்க்கிலேயே மாஸ் காட்டியுள்ளார். தமிழ் பொண்ணு என்று மெட்டலால் அச்சிடப்பட்ட மாஸ்க் ஒன்றை அவர் அணிந்துள்ளார். மேலும், அந்த மாஸ்க்கில் ஜெயின், பெல்ட் போன்றவை இருப்பது போன்று அந்த மாஸ்க் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மாஸ்க்கை ரச்சனா மற்றும் ருச்சிகா ஆகியோர் வடிவமைத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஒரு மாஸ்க் அணிவதற்கு பதிலாக இரு மாஸ்க் அணிய வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். அந்த வகையில், அப்டேட்நியூஸ்360 (UpdateNews360) சார்பாக ரசிகர்களுக்கு சின்ன வேண்டுகோள்: எங்கு சென்றாலும் முகத்திற்கு இரண்டு மாஸ்க்குகள், கையில் கிளவுஸ் – கள், பாக்கெட்டில் SANITIZER – உடன் செல்லவும்