16 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன் காதலுக்கு சம்மதிக்காத 13 வயது சிறுமியை கொலை செய்த விவகாரம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் சோழப்பூண்டி கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி பிரியதர்ஷினி அருகிலுள்ள அரசுப்பள்ளியில் படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த வாழ்முனி என்பவரின் மகன் 16 வயது ஸ்ரீநிவாசன் சென்னையில் படித்து வருகிறார். தற்போது கொரோனா காரணத்தினால் சொந்த ஊருக்கு சென்றுள்ளார் ஸ்ரீநிவாசன். அங்கு ஸ்ரீனிவாசனும், ப்ரியதர்ஷினியும் நட்பு ரீதியாக பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில் ப்ரியதர்ஷினியின் மீது காதல் வயப்பட்ட ஸ்ரீநிவாசன் அதை அந்த சிறுமியிடம் தெரிவித்துள்ளார். பிரியதர்ஷினி காதலை மறுத்துள்ளார் மேலும் தன் பெற்றோர்களிடம் தெரிவித்து பெற்றோர்களும் ஸ்ரீநிவாஸனை கண்டித்துள்ளனர்.
நேற்று மதியம் சிறுமி வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் ஸ்ரீநிவாசன் அவர் வீட்டிற்கு சென்று ப்ரியதர்ஷினியிடம் தவறாக நடக்க முற்பட்டுள்ளார் இதனால் அந்த சிறுமி கூச்சலிடவே சிறுவன் தன கையில் இருந்த கத்திரிக்கோலை வைத்து அந்த சிறுமியின் கழுத்தில் குத்தி விட்டு தப்பி ஓடியுள்ளான்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்க்கும் போது சிறுமி இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் ஒளிந்து இருந்த சிறுவனையும் கைது செய்தனர். காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் நடந்த இந்த மரணம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.