கோவை காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு கர்நாடக மாநிலங்களுக்கிடையே பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா காரணத்தினால் பல போக்குவரத்தும் முடக்கப்பட்டு இருந்தது. அதுவும் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு பேருந்து வாயிலாக செல்ல முடியாமல் இருந்தது. இதனால் பயணிகள், பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி இருந்தனர்.
ஆனால் ரயில் போக்குவரத்துக்கு மட்டும் எந்த தடியும் இன்றி இயங்கி வந்தது. ஆயினும் பேருந்து வசதி இல்லாமல் இருப்பது கடினமாகவே இருந்தது.
இந்த நிலையில் தற்போது தமிழக அரசு தமிழகத்தில் இருந்து பெங்களூரு செல்வதற்கான போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்துள்ளது. இதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழகத்தின் முக்கிய பேருந்து நிலையமான கோவை காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையத்திலிருந்து கர்நாடக மாநிலத்திற்குப் பேருந்து சேவை தொடங்கிய நிலையில் குறைந்த அளவு பயணிகளைக் கொண்டு பேருந்து இயக்கப்பட்டது.
பேருந்துகளில் பயணிக்கும்போது தவறாமல் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்துகொள்ள வேண்டும். முகக்கவசம் அணியாமல் வருபவருக்கு பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை.
நீண்ட இடைவேளைக்கு பிறகு இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் தங்களின் உறவினர்களை கண்டு மகிழ ஆரவாரத்துடன் புறப்பட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில் அனைவரும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு சார்பாக அன்போடு கேட்டுக்கொள்ள படுகிறது.