மது விருந்துடன் நடன நிகழ்ச்சி செய்ததால் அந்த பார் மேலாளர் கைது செய்யப்பட்டார்.
நீலாங்கரை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் தனியாருக்கு சொந்தமான பாரில் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் விளம்பரம் செய்து, மது விருந்துடன் இளம்பெண்களை வைத்து நடன நிகழ்ச்சி நடத்தப்படுவதாக நீலாங்கரை உதவி கமிஷனர் விஸ்வேஸ்வரையாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின்பேரில், நீலாங்கரை போலீசார் அந்த பாரை ரகசியமாக கண்காணித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு அந்த பாரில் அதிகளவு இளைஞர்கள் வந்து செல்வது தெரிந்தது. உடனே, உள்ளே நுழைந்து அதிரடி சோதனை நடத்தியபோது, மது விருந்துடன் கூடிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது தெரிந்தது.
இதுதொடர்பாக, பார் மேலாளர் பாடியை சேர்ந்த ஸ்டாலின், நடன நிகழ்ச்சி நடத்திய ஜாம்பஜாரை சேர்ந்த வசந்த், சட்டவிரோதமாக மது விற்பனை செய்த பாடியை சேர்ந்த கணேஷ் ஆகிய 3 பேரை காவல் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில், சட்ட விரோதமாக மது விருந்து நடத்தி வந்தது தெரியவந்தது. இதில் ஸ்டாலினை கைது செய்தனர்.