குப்பைகளை அகற்றிய பின்னர் பாஜக நிர்வாகிகள் குப்பை மூட்டைகளை எடுத்துச் செல்லாமல் மீண்டும் கடற்கரையிலேயே விட்டுச் சென்ற நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் 71-ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் உள்ள பாஜகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக பாஜகவினர் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். இந்த பணியில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். குப்பைகளை அகற்றிய பின்னர் பாஜக நிர்வாகிகள் ப்ளாஸ்டிக் கவர்களில் கட்டப்பட்ட குப்பை மூட்டைகளை மீண்டும் கடற்கரையிலேயே விட்டுச் சென்றுள்ளனர்.
இதனை சமூகவலைத்தளங்களில் விமர்சித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.




