அமெரிக்காவில் டிக்டாக் சவாலை முயற்சித்த சிறுவன் மூளைச்சாவடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் 12 வயதான யோசுவா ஹைலீஸஸ் என்ற சிறுவன் டிக் டாக் சவால் ஒன்றை முயற்சித்து மார்ச் 22ஆம் தேதி குளியலறையில் பேச்சு மூச்சின்றி கிடந்ததை அவனின் இரட்டை சகோதரர் கண்டு பெற்றோருக்கு கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பெற்றோர் யோசுவா டிக் டாக் சவாலின் ஒரு பகுதியாக ஷூலேஸால் மூச்சு திணற வைத்துள்ளதாக கூறுகின்றனர் .
மேலும் 3 நாட்களுக்கு முன் தன் சகோதரரிடம் தன்னால் ஒரு நிமிடம் வரை மூச்சு விடாமல் இருக்க முடியும் என்று யோசுவா கூறியுள்ளான். தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட யோசுவா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர் .இந்த செய்தி அவர்களின் குடும்பத்தினருக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
மேலும் யோசுவாவிற்கு ஏற்பட்ட நிலை எந்த சிறுவர்களுக்கும் ஏற்பட கூடாது என்றும் இதுபோன்ற சவால்கலில் சிறுவர்கள் ஈடுபட வேண்டாம் என்றும் அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.