திருமண விழாவில் புதுமண தம்பதிக்கு தோழிகள் வெங்காயத்தை பரிசாக அளித்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

வெங்காயத்தின் விலை தங்கம் போல ஏறி மக்களின் மனதை களங்கவிடுகிறது. இல்லது அரசுகளின் கண்களில் வெங்காயம் வெட்டினால் தான் கண்ணீர் வரும் ஆனால் இப்போது வெங்காயத்தை பார்த்தாலே கண்களில் கண்ணீர் பெருகி ஆறென ஓடுகிறது இப்போது. அதனிவரித்து பலரும் சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடந்த திருமண விழாவில் புதுமண தம்பதிக்கு வெங்காயம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. 5 கிலோ வெங்காயத்தை பூச்செண்டு போல அலங்கரித்து மணப்பெண்ணின் தோழிகள் மணமக்களுக்கு பரிசாக வழங்கினர். விலை உயர்வை உணர்த்தும் வகையில் வெங்காயத்தை பரிசாக வழங்கப்பட்ட இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.




