கரும்புகளை தின்னும் ஆசையில் தோட்டத்திற்குள் புகுந்த யானைக்குட்டி செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
தாய்லாந்து நாட்டில் யானைகள் நடமாட்டம் பொதுவாக அதிகம். நம்மூரை போலவே அவ்வப்போது அங்குள்ள யானைகளும் வாய்வெளி, சோளக்கொல்லை போன்ற பகுதிகளில் புகுந்து தனக்கு தேவையானவற்றை தின்றுவிட்டு போகுமாம். இதனை தடுக்கவே தாய்லாந்து விவாசியிகள் இரவிலும் தம் வயல்களில் காவல் பணியில் ஈடுபடுவார்களாம்.
இந்நிலையில் வடக்கு தாய்லாந்தின் சியாங் மாய் பகுதியில் உள்ள கரும்பு தோட்டம் ஒன்றில் ஏதோ ஒரு சலலப்பு சத்தம் கேட்கவே அங்கு காவலுக்கு இருந்த விவசாயிகள் டார்ச் லைட்டை தூக்கிக்கொண்டு ஓடியுள்ளார். கரும்பு தோட்டத்தில் தனியாக வந்த குட்டி யானை ஒன்று மக்கள் அனைவரும் டார்ச் லைட்டுடன் ஓடி வருவதை கண்டு பயந்து ஒளிந்து கொள்ள முயற்சித்துள்ளது. பின்னர் அங்கு இருந்த மின்கம்பம் ஒன்றின் பின் சென்று அசையாமல் நின்றுகொண்டது.
தான் மின்கம்பத்தில் பின்னால் நின்றாள் ஒளிந்துகொள்ள முடியாது என்பது கூட தெரியாமல் நின்ற அந்த யானையை அங்கு வந்து காவலர்கள் போட்டோ பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். தற்போது உலகம் முழுக்க அந்த யானைக்குட்டியின் க்யூட்டான புகைப்படங்கள் வைரலாகி பல இதங்களை கவர்ந்து வருகிறது. யானைக்குட்டியின் செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது.