சென்னையில் தி.மு.க.வின் தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகரனை மர்மநபர்கள் சிலர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடினர்.
அரிவாள் வெட்டு
தி.மு.க.வின் தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகரன். இவர் கே.கே.நகரில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் கட்சி விவகாரம் தொடர்பாக இன்று சென்றிருந்தார். அப்போது, மர்ம நபர்கள் சிலர் திடீரென அரிவாள்களுடன் அலுவலகத்திற்குள் புகுந்தனர். அவர்கள் தனசேகரனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். இதனால் பலத்த காயமடைந்த அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வழக்குப்பதிவு
இந்த சம்பவத்தில், அந்த அலுவலகத்தில் பணியாற்றி வந்த பெண் ஊழியருக்கும் காயம் ஏற்பட்டது. அவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்