இந்த வருட யு.எஸ். ஓபன் போட்டி காலி அரங்கில் செப்டம்பர் 13 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியைக் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.

இந்த கொரோனா தொற்று காரணத்தால் இந்த வருடம் ஓபன் போட்டியிலிருந்து பல பிரபல போட்டியாளர்கள் விலகியுள்ள நிலையில் இந்த வருட யு.எஸ். ஓபன் போட்டியின் முதல் சுற்றுக்கு இந்திய வீரர் சுமித் நாகல் நேரடியாகத் தகுதி பெற்றார்.
23 வயது சுமித், தரவரிசையில் 122-வது இடத்தில் உள்ளார். தரவரிசையில் தன்னை விடவும் ஆறு இடங்கள் குறைவாக உள்ள அமெரிக்காவின் பிராட்லி கிளானை முதல் சுற்றில் எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் 6-1, 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் வென்று சுமித் நாகல் 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் கடந்த 7 வருடங்களில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முதல் சுற்றை வென்ற முதல் இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றார்.
சுமித் நாகல் தனது 2-வது சுற்றில் உலகின் நெ.3 வீரரான டொமினிக் தீமுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் 6-3, 6-3, 6-2 என நேர் செட்களில் சுமித் நாகலை டொமினிக் தீம் வீழ்த்தினார்.




