இரண்டாம் குத்து படத்தின் டீசர் தற்போது 20 லட்சம் பார்வையாளர்கலைக் கடந்துள்ளது.

ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து படங்களை இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயக்குமார். இந்த இரண்டு அடல்ட் காமெடி வகையான படங்கள். தற்போது அவர் இரண்டாம் குத்து என்ற அடல்ட் காமெடி படத்தை இயக்கி அதில் தானே நடித்தும் உள்ளார்.
இந்தப் படத்தின் டீசர் வெளியாகி பெரும் கண்டனங்களை சந்தித்துள்ளது. டீசரில் ஆபாச வசனங்கள், காட்சிகளுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இந்தப் படத்தின் டீசர் 20 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இந்நிலையில், அதனை கொண்டாடும் வகையில், இரண்டாம் குத்து படத்தின் நாயகி மீனள் சாஹு மற்றும் சந்தோஷ் ட்விட்டர் பக்கத்தில் இரண்டாம் குத்து படத்தின் அடுத்த போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிக் பாஸ் டேனியல் மீது மீனளும், மீனள் மேல் சந்தோஷும் இருப்பது போல் அந்த போட்டோ வெளியாகியுள்ளது.
இதைப் பார்த்த நெட்டிசன்கள் சந்தோஷை மீண்டும் திட்டித் தீர்க்கத் தொடங்கிவிட்டனர்.




