புரட்டாசி மாதம் தொடங்கினாலும் காசிமேடு மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் குறைந்தபாடில்லை. இறைச்சி கடைகளில் வழக்கத்தைவிட கூட்டம் சற்று குறைந்திருந்தது.

கொரோன ஊரடங்கு காலத்திலும் கூட கரி எடுக்க கூட்டம் கோட்டமாக சென்றவர்கள் இப்போது தடை உத்தரவு தளர்க்கப்பட்ட நிலையில் சும்மா இருப்பார்களா. ஞாயிற்றுகிழமை ஊரடங்கு போட்டபோது சனிக்கிழமையே சென்று அடுத்த நாளைக்கு தேவையானவற்றை வாங்கிவைத்தவர்கள் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட பிறகு, மீன் மார்க்கெட்டுகளில் கூட்டம் சேர்த்துக்கொண்டு இருக்கின்றனர்.
சற்றே ஊரடங்கு தளர்விக்கப்பட்ட நிலையில் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டோம் என்ற சந்தோஷத்தில் இருக்கின்றனர். அதனால் நேற்றும் காசிமேடு, வானகரம், சிந்தாதிரிப்பேட்டை, திரு.வி.க.நகர் போன்ற இடங்களில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் எப்போதும் போலவே மக்கள் கூட்டம் அலைமோதியது.
அதிலும் காசிமேடு பகுதியில் நேற்று தேனீ கூட்டங்கள் போன்று மக்கள் மொய்த்து தள்ளினார். சமூக இடைவேளையாவது, கொரோனவாவது என்று செயல் பட்டனர். அதிலும் சிலர் முகக்கவசம் கூட அணியாமல் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. புரட்டாசி மதம் ஆரமித்துள்ள நிலையில் இறைச்சி வியாபாரம் குறைந்து காணப்படும் அனால் இந்த முறை கூட்டம் குறைவில்லாமல் காணப்பட்டது ஆசிரியத்தை அளிக்கின்றது. அனால் வியாபாரம் குறைந்துள்ளது என சில வியாபாரிகள் கூறியுள்ளனர். விற்பனை குறைந்திருந்தாலும், இறைச்சி வகைகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமலே காணப்பட்டது.




