கல்லூரி மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட போக்சோ அடிப்படியில் விரிவுரையாளர் கைது செய்யப்பட்டார்.

சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண், அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். அந்த கல்லூரியில் விரிவுரையாளராக, வில்லிவாக்கத்தை சேர்ந்த லோகேஷ் எனபவர் அங்கு பணிபுரிந்து வருகிறார். அப்போது மாணவி பாடத்தில் சந்தேகம் கேட்க வரும்போது, லோகேஷுடன் காதல் என்னும் மோக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, மாணவியிடம் திருமண ஆசைவார்த்தை கூறிய லோகேஷ், அவரிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
இதற்கிடையே, லோகேஷுக்கும் வேறொரு பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து உள்ளது. இதனால் லோகேஷ் அந்த மாணவியிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார், மேலும் அவரைவிட்டு தூரம் சென்றுள்ளார். இது அந்த மாணவிக்கு தெரிய, அதைப்பற்றி அவர் லோகேஷிடம் கேட்டபோது அவர் மாணவியை மிரட்டியும், திட்டியும் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தன்னிடம் கல்லூரி விரிவுரையாளர் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்ததாக, தனது பெற்றோரிடம் மாணவி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, போக்சோ சட்டத்தின்கீழ் லோகேஷை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.




