கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதமம் 63.33 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 30 ஆயிரத்தை தாண்டி வருகிறது. இருப்பினும் கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 63.33 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 34,956 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,20,644 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்தனர். ஒரே நாளில் 680 பேர் கொரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 25,777 ஆக அதிகரித்துள்ளது.
பாதிப்பு அடைந்தவர்களில் இதுவரை 6,44,172 பேர் குணமடைந்தனர். அதில் 3.42 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சை பெறுவோரில் 1.94 சதவீதத்தினர் மட்டும் தீவிரசிகிச்சைப்பிரிவில் உள்ளனர். அதில் 0.35 சதவீதத்தினர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2.81 சதவீதத்தினர் ஆக்சிஜன் படுக்கையிலும் உள்ளனர். இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.