செப்டம்பர் 7ஆம் தேதி முதல் சென்னையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயங்கும்.

கடந்த 5 மாதங்களாக பொதுமுடக்கம் அற்வித்துருந்த நிலையில். இப்போது செப்டம்பர் 7 முதல் பேருந்து மற்றும் இரயில்கள் இயங்கும் என அறிவித்தனர்.தற்போது அதுகுறித்து பல தகவல்கள் வந்த வண்ணம் இருகின்றது. இந்த அறிவிப்புகள் மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் 7 ஆம் தேதி முதல் இயங்க உள்ள மெட்ரோ ரயிலுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயங்கும் என்றும் அலுவலக நேரமான காலை 8.30 முதல் 10.30 வரை 5 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்றும் அலுவலகம் இல்லாத நேரத்தில் 10 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்றும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரயில் நிலையங்களில் முன்பு ஒவ்வொரு ரயிலும் 20 வினாடிகள் நின்று செல்லும், இந்த நேரம் 50 வினாடிகளாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் டோக்கன் மூலம் பயணிக்கும் முறைக்கு மாற்றாக ஸ்மார்ட் கார்டு மூலம் பயணிக்க ஊக்குவிக்கப்படவுள்ளனர். மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள லிப்டில் ஒரே நேரத்தில் மூன்று பேர் மட்டுமே உபயோகிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.




