இன்ஸ்டா மாடலுக்கு விமானத்தில் பறக்க மறுப்பு காரணம் பிகினி உடை என தெரிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராமின் பிரபல மாடலான இசபெல் எலினார் தனது கணவருடன் இந்த வார தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்ட் கோஸ்டில் இருந்து மெல்போர்னுக்கு விமானத்தில் பயணம் செய்ய இருந்தார். விமானத்தில் ஏறும் போது கறுப்பு நிறத்தில் உள்ள டாப் அணிந்திருந்தார். பிகினி உடை போல தோன்றியதால் அதை அணிந்து பயணம் செய்ய அவர் ஏறிய ஜெட் ஸ்டார் விமானம் அனுமதி அளிக்கவில்லை.
கோபமடைந்த இசபெல் தனது இன்ஸ்டா பக்கத்தில் “என்னுடைய டாப் மிகச்சிறியதாக இருப்பதால் அவர்கள் என்னை அனுமதிக்கவில்லை என கூறினர். உண்மையில் என்னுடைய மார்பகங்கள் சிறியதாக இருந்திருந்தால் அவர்கள் எதுவும் சொல்லியிருக்க மாட்டார்கள் என நான் உத்திரவாதம் தருகிறேன்” என்று அவர் எழுதினார். கேபின் குழுவின் வற்புறுத்தலால் அவர் விஸ் வெஸ்ட் என்னும் ஆடையை அணிந்தார்.
ஜெட் ஸ்டாரின் செய்தி தொடர்பாளர் இசபெல்லிடம் மன்னிப்பு கேட்டார். “இசபெல்லின் சமீபத்திய அனுபவங்களை பற்றி தெரிந்துக்கொண்டோம். இந்த நிலைமை இப்படி கையாளப்பட்டதற்காக அவர்களிடம் நாங்கள் மன்னிப்பு கோரியுள்ளோம். எங்கள் கொள்கை என்ன என்பதில் ஒரு தவறான புரிதல் நிகழ்ந்துவிட்டது.