ஜி.எஸ்.டி- யால் வரும் வருமானத்தை கெடுத்துவிட்ட கொரோனா. இந்த ஆகஸ்ட்டில் ஜி.எஸ்.டி வருமானம் வெறும் ரூ.86,449 கோடி மட்டுமே.

நாடு முழுவதும் ஜூலை 1 அன்று ஜி.எஸ்.டி அமுலுக்குவந்தது. இதன் மூலமாக இந்திய அரசுக்கு மாதம் 1 லட்சம் கோடி வரை வருமானம் வந்துகொண்டு இருந்தது.
கொரோனா வந்த பிறகு கடந்த ஆறு மாதங்களில் ஜிஎஸ்டி வரி வசூல் மேலும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. அரசின் இலக்கை அடைவதும் எட்டாக் கனியாக உள்ளது. கொரோனாவால் உலகமே பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் விவரங்களை மத்திய நிதியமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, ரூ.86,449 கோடி மட்டுமே அந்த மாதத்தில் கிடைத்துள்ளது. இது முன் மாதங்களை காட்டிலும் பெரிதும் குறைந்துள்ளதாக காணப்படுகிறது.
ஜிஎஸ்டி வசூலில், தமிழகத்தில் 2020 ஆகஸ்ட் நிலவரப்படி மொத்தம் ரூ.5,243 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. 2019 ஆகஸ்ட் மாதம் இதன் அளவு ரூ.5,973 கோடியாக இருந்தது. இது 12 சதவீதம் வீழ்ச்சியாகும். இப்படியே போனால் நாட்டின் நிலைமை என்ன என அரசாங்கம் பெரும் கவலைக்கு ஆலாகியுள்ளது.




