பரீட்சையில் சினிமா பாடல் எழுதிய மாணவனை ஆசிரியர் அசிங்கப்படுத்தியதால் விபரீதம் நிகழ்ந்துள்ளது.
தமிழகத்தில் போச்சம்பள்ளி அடுத்த ஓட்டத்தெரு கிராமத்தை சேர்ந்தவர் சாந்தகுமார் இவரது மகன் கார்த்தி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் இதில் நேற்று தாவரவியல் ஆசிரியர் தேர்வுப் வைத்தபோது தெரியாத கேள்விகளுக்கு கார்த்திக் சினிமா பாடல்களை எழுதியுள்ளார்.
தேர்வு முடிந்ததும் விடைத்தாள் திருத்தும் போது இதை கவனித்த ஆசிரியர் மற்றும் மாணவர்கள் முன்பு படித்துக் காட்டி உள்ளார் அப்போது அந்த வழியாக வந்த வீதியில் ஆசிரியரிடமும் இதை கூற அனைவரிடமும் இதை சொல்ல போவதாக இருவரும் பேசி உள்ளனர் உடனே இதுபோன்று தவறு செய்யமாட்டேன் என கார்த்திக் மன்னிப்பு கேட்டும் பள்ளியை விட்டு வெளியே செல்லுமாறு கூறியுள்ளனர் அத்துடன் திரும்பி வந்தால் பெற்றோர் அழைத்து வரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனால் அழுதுகொண்டே வீட்டுக்கு வந்த கார்த்திக் உறவினரிடம் இதுபற்றி கூறியுள்ளார் அவர்களே கார்த்திகை சமாதானம் செய்துவிட்டு தந்தை வந்தால் பேசிக்கொள்ளலாம் என கூறி உள்ளனர் இருப்பினும் அதிக மன உளைச்சலுக்கு ஆளான கார்த்திக் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான் இதுகுறித்து தகவலறிந்த போச்சம்பள்ளி போலீசார் கார்த்திக்கின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.