நாயை கட்டையால் அடித்துக்கொல்லும் வைரல் வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

மதுரை :
மதுரையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் தெரு நாய் ஒன்றை ரோட்டில் அடித்துக்கொல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.விலங்குகளை துன்புறுத்தக்கூடாது என்பதற்காக மிருகவதை தடுப்புச் சட்டம் கொண்டு வந்தாலும் விலங்குகள் மீதான கொடுமைகள் நின்றபாடில்லை.
அதனை நிரூபிக்கும் விதமாக மதுரையைச் சேர்ந்த விமல்ராஜ் என்ற ஆட்டோ டிரைவர் கட்டையால் நாயை மாறி மாறி அடித்து துன்புறுத்துகிறார்.
அந்த நபரின் தாக்குதலில் துடிதுடித்து இறந்துபோகிறது நாய். இறந்தபின்பு சாக்குப்பையில் கட்டி எடுத்துப்போகிறார், நாயை கொடூரமாக தாக்கும் இரக்கமற்ற அந்த நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.இதனை, சமூக வலைதளங்களில் பகிர்ந்து நடவடிக்கை எடுக்கச்சொல்லி நெட்டிசன்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை டேக் செய்துள்ளனர்.




