குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் தனது சொகுசு காரில் முறையற்ற காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய மாணவியை டெல்லியில் மீட்டுள்ளார் கணவர் ஒருவர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் சொகுசு கார் , 45 பவுன் நகை, ரூ13 லட்சத்துடன் மாயமான தொழிலதிபர் மனைவி குழந்தை மற்றும் காதலனுடன் டெல்லியில் மீட்கப்பட்டுள்ளார். மார்த்தாண்டம் அருகே கொடுங்குளத்தை சேர்ந்த மோகன்ராஜ் (வயது41) இவர் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சோனியாகாந்தி (வயது 35) இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி இரவு சோனியாகாந்தி மற்றும் மகளை காணவில்லை. இதேபோல் வீட்டிலிருந்த சொகுசு கார், பீரோவில் இருந்த 45 பவுன் நகை, ரூ.13 லட்சம் பணம் ஆகியவையும் மாயமாகி இருந்தது.
உறவினர் வீடுகளில் தேடியும் இவர்கள் கிடைக்கவில்லை இதனைத்தொடர்ந்து மோகன்ராஜ் மார்த்தாண்டம் போலீசில் புகார் அளித்தார். மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். போலீசார் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து மோகன்ராஜ் மதுரை ஐகோர்ட்டில் மனைவி மகளை கண்டுபிடித்து தருமாறு ஹேபியஸ்கார்பஸ் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி 30 நாட்களில் சோனியாகாந்தி மற்றும் அவரது மகளை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு மார்த்தாண்டம் போலீசாருக்கு உத்தரவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து போலீசார், தொழிலதிபரின் மனைவி மற்றும் மகளை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். தனிப்படையினர் சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இவர் எட்டுமுறை சிம் கார்டுகளை மாற்றியதால் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.தொடர்ந்து செல்போனை தீவிரமாக கண்காணித்து வந்தனர். சோனியா காந்தி அவரது மகள் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் டெல்லியில் தங்கி இருப்பது தெரியவந்தது.தனிப்படை போலீசார் டெல்லிக்கு விரைந்து சென்று உள்ளூர் போலீசார் உதவியுடன் 3 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் குமரிமாவட்டம் கொண்டுவந்து குழித்துறை கோர்ட்டில் மூவரையும் ஆஜர்படுத்தினர்.
சோனியா காந்தி கணவர் மற்றும் மகன் ஆகியோர் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். போலீசார் இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். ஆனால் சோனியா காந்தி கணவருடன் செல்ல தனக்கு விருப்பமில்லை. காதலன் உடன் தான் செல்வேன் என்றார். உடனே கணவர் குறுக்கிட்டு மகனுக்கு உடல்நிலை சரியில்லை. அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது. எனவே குழந்தையை பாதுகாக்க கண்டிப்பாக அம்மா வேண்டும் எனக்காக இல்லாவிட்டாலும் பிள்ளைகளுக்காக என்னுடன் இருக்க வேண்டும் என்று கெஞ்சி கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து பிள்ளைகளின் பாசப்போராட்டத்தால் சோனியாகாந்தி மனம் மாறினார். கணவனுடன் செல்வதாக கூறினார். போலீசார் இருதரப்பினரையும் எழுதி வாங்கிக்கொண்டு கணவருடன் சோனியாகாந்தியையும் அவரது மகளையும் அனுப்பிவைத்தனர். கள்ளக்காதலனையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.




