Friday, March 6, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

சேலத்தில் உலகிலேயே மிகப்பெரிய பிரம்மாண்ட முருகன் சிலை!! மலேசியா சிலையை விட பெரியது…

September 21, 2021

மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலையை விட மிக பிரமாண்டமாக சேலத்தில் உலகத்திலேயே மிகப்பெரிய 146 அடி உயர முருகன் சிலை அமைக்கும் பணி முடிவுற்று கடவுளின் சிலைக்கு வண்ணம் தீட்டப்பட்டு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் பத்துமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. அங்கு 140 அடி உயரத்தில் மிகப்பெரிய முருகன் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. மலேசியாவுக்கு சுற்றுலா செல்லும் இந்திய சுற்றுலா பயணிகள் இந்த கோவிலில் தரிசனம் செய்து வருவார்கள். உலகத் தமிழர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான முருகன் கோயில் இதுவாகும். இங்கு நடக்கும் விழாக்களில் உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் கலந்து கொள்ளுவர். இந்த நிலையில், சேலம் மாவட்டம் சேலம்-உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில், வாழப்பாடியை அடுத்து புத்திரகவுண்டன்பாளையத்தில், 146 அடி உயரத்தில் பிரமாண்ட முருகன் சிலையானது நிறுவப்பட்டு வருகிறது.

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

இந்த சிலையை, மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் பத்துமலை முருகன் சிலையை வடிவமைத்த, ஸ்தபதி தியாகராஜன் தலைமையிலான குழுவினரே வடிவமைத்து வருகிறார்கள். ஸ்தபதி தியாகராஜன் திருவாரூரை சேர்ந்தவர். இவர் தலைமையில் மலேசியாவில் உள்ள முருகன் சிலையை விட பிரமாண்டமாக 146 அடி உயர முருகன் சிலை அமைக்கும் பணிகள் சேலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சுமார் ஐந்து ஆண்டுகளாக தினமும் 25 சிலை வடிவமைப்பு கலைஞர்களைக் கொண்டு முருகன் சிலையை வடிவமைக்கும் பணியைச் செய்து வருகின்றனர். தற்போது முழு உருவமும் அமைக்கப்பட்டு முழுமையாக வண்ணம் தீட்டும் பணியும் நிறைவடைந்துள்ளது. சிலையின் அருகே தற்போது ஒரு லிப்ட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த லிப்ட் மூலம் பக்தர்கள் மேலே சென்று தாங்களே முருகன் சிலையின் கையில் உள்ள வேல் மீது பால் ஊற்றி அபிஷேகம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த முருகன் சிலையை அமைத்து வரும் தீவிர முருக பக்தரான ஸ்ரீதர் கூறுகையில்,”இந்த முருகன் சிலையைச் சாதனைக்காக நான் கட்டவில்லை. முருகப் பக்தர்களைத் திருப்திப்படுத்தவே இந்த முயற்சியை மேற்கொண்டேன். தமிழ் கடவுளான முருகனை அனைத்து மத தரப்பினரும் அதிகளவில் நேசிக்கின்றனர். கட்சிப் பாகுபாடின்றி இந்த பணியை ஆன்மீகம் என்ற அடிப்படையில் செய்து வருகிறோம், இந்த சிலை கட்டுமானத்தை 2016ல் எனது தந்தை முத்து நடராஜன் தொடங்கினார். தற்போது இந்த சிலை அமைக்கும் பணி 99 சதவிகிதம் முடிவடைந்துள்ள நிலையில் வரும் டிசம்பர் மாதத்தில் பணிகள் முடிவடைந்து கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும்” என்று தெரிவித்தார்.

தற்போதே ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்லும் நிலையில் இந்த சிலை விரைவில் திறக்கப்படவுள்ளதால், முருக பக்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்கு கொண்டு வர அனுமதிக்கிறோம் ஆனால்… தமிழக அரசின் நிபந்தனை!!

Next Post

நகையை அடமானம் வைக்காமலேயே நகைக்கடன்.. கூட்டுறவு வங்கியில் ரூ.3 கோடிக்கு மேல் மோசடி

Next Post

நகையை அடமானம் வைக்காமலேயே நகைக்கடன்.. கூட்டுறவு வங்கியில் ரூ.3 கோடிக்கு மேல் மோசடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version