வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிவர் புயல் வெற்றிகரமாக கரையை கடந்தது. நிவர் புயலின் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகள் செய்யப்பட்டது. அதனால் பெருமளவில் பொருள் சேதமும், உயிர் சேதமும் இல்லாமல் தப்பித்தது. தற்போது தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறும் என தமிழக வானிலை மையம் கூறியுள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி வரும். மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினால் தமிழகத்தில் டிச.1 முதல் டிச.3ந்தேதி வரை மழை பெய்ய கூடும்.
வங்கக்கடலில் நிவர் புயல் உருவாகி கரையை கடந்த நிலையில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிறது என தமிழக வானிலை மையம் வெளியிட்ட தகவல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.