தமிழகத்தில் புதிய படங்களை வெளியிடுவதில்லை என நடப்பு தயாரிப்பாளர்கள் முடிவு எடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டதால், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திரையரங்குகள் இயங்குவதற்கு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் பெரிய படங்கள் 50 நாட்களுக்கு பிறகும், சிறிய படங்களை 30 நாட்களுக்கு பிறகும் ஓடிடிக்கு தர திரையரங்கு உரிமையாளர்கள் நிபந்தனை விதித்துள்ளனர். இந்த விவகாரத்தில் திரையரங்க உரிமையாளர்கள், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் இடையே பேச்சுவார்த்தை நடத்தி முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடையும் பட்சத்தில் புதிய படங்களை வெளியிடுவதில்லை என நடப்பு தயாரிப்பாளர்கள் முடிவு எடுத்துள்ளனர்.