பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ஆன்லைன் விற்பனையில், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 68 கோடி ரூபாய் மதிப்புக்கு ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஆன்லைன் ஷாப்பிங்:
தீபாவளி, தசரா பண்டிகையை ஒட்டிய பண்டிகை சீசனில் வங்கிகளிலும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்புச் சலுகைகளை அறிவிப்பது வழக்கம். குறிப்பாக, அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற தளங்களில் குறைந்த விலைக்கு ஸ்மார்ப்டோன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கலாம். இதற்காகவே மாதக் கணக்கில் பணம் சேர்த்து வைத்து ஷாப்பிங் செய்பவர்களும் உண்டு. அந்த வகையில் இந்த ஆண்டின் பண்டிகை சீசன் சிறப்பாகவே தொடங்கியுள்ளது.
பண்டிகை காலமும், ஆன்லைன் ஷாப்பிங்கும்:
புதிய மாடல்கள் அறிமுகம், ஈஎம்ஐ வசதி, தள்ளுபடி போன்ற சலுகைகள் இந்த முறையும் அதிகமான அளவில் அறிவிக்கப்பட்டுள்ளன. மொபைல் போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு இந்த முறை அதிக தேவை இருப்பதாகத் தெரிகிறது. ரெட்சீர் கன்சல்டிங் நிறுவனத்தின் ஆய்வுப்படி, ஃபிளிப்கார்ட் – அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் மொத்தம் 68 கோடி ரூபாய் மதிப்புக்கு ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
அன்பானவர்களுக்கு நீங்க என்ன பரிசு தரபோறீங்க?
ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களுக்கான போட்டியில் இந்த முறை அமேசான் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி ஃபிளிப்கார்ட் முதலிடம் பிடித்துள்ளது. அதன் சந்தை மதிப்பு 64 சதவீதமாக உயர்ந்துள்ளது. பண்டிகை சீசன் விற்பனை தொடங்கிய முதல் வாரத்திலேயே ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் மொத்தம் ரூ.32,000 கோடிக்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது சென்ற் ஆண்டு விற்பனையை விட 32 சதவீதம் அதிகமாகும்.
பண்டிகைக் காலமும் கொரோனாவும்:
கொரோனா பிரச்சினையால் வாடிக்கையாளர்கள் நிதி நெருக்கடி காரணமாக, ஃபேஷன் பொருட்களை அதிகமாக வாங்குவதைக் குறைத்தனர். ஆனால் இப்போது பண்டிகை சீசன் விற்பனையில் மீண்டும் ஃபேஷன் பொருட்களை அதிகமாக வாங்கத் தொடங்கியுள்ளனர். ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களைப் பொறுத்தவரையில், வாடிக்கையாளர்களை அதிகமாக ஈர்ப்பதற்காகவும் சிறந்த சேவை வழங்கவும், டெலிவரி காலத்தை 5 மணி நேரம் குறைத்துள்ளன. இதற்காக அதிக சேமிப்புக் கிடங்குகளை அமைப்பது டெலிவரி சேவையை வேகப்படுத்துவது என பல்வேறு நடவடிக்கைகளை ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.