அரக்கோணம் அருகே டாஸ்மாக் விற்பனையாளரிடம் இருந்து ரூ.3 லட்சம் பணம் வழிப்பறி செய்துள்ளனர்.
டாஸ்மாக் என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டம் தான். மேலும் அதில் வருமானமும் கொஞ்சம் பெருத்தது என்று அனைவரும் அறிந்துதான். ஒரு நாளைக்கு பல லட்சங்களில் வியாபாரம் நடக்கும். அந்த பணத்தை டாஸ்மாக் கடையில் விற்பனை முடிந்தவுடனே கணக்கு செய்து எடுத்துக்கொண்டு அதை பேங்கில் கட்டுவது வழக்கம்.
அதனை பத்திரமாக எடுத்து கொண்டு வீடு திரும்புவதோ இல்லை அதனை எடுத்துக்கொண்டு பேங்கில் கட்டுவதோ மிகவும் சாமர்த்தியமான விஷயம் தான். ஏனெனில் திருடர்களின் நடமாட்டம் இரவு நேரங்களில் அதிகம், அப்போது கொஞ்சம் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
இந்நிலையில் அரக்கோணம் அருகே டாஸ்மாக் விற்பனையாளரிடம் இருந்து ரூபாய் 3 லட்சம் பணம் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது. துறையூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளர் ஞானவேல். இவர் எப்போதும் போல நேற்று இரவு பணத்தை எடுத்துக்கொண்டு சென்ற போது அவரை வழி மறைத்த முன்பின் தெரியாத மர்ம ஆசாமிகள் அவரை மிரட்டி அவரிடமிருந்த மூன்று லட்சம் ரூபாய் பணத்தை வழிப்பறி செய்தனர்.