திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம். இந்நிலையில் இன்று கிறிஸ்துமஸ் மற்றும் பள்ளிகளுக்கு அறையாண்டு விடுமுறை என்பதால் கொடைக்கானலில் கடந்த இரண்டு நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
இவர்கள் வனப்பகுதிகளில் உள்ள மோயர் சதுக்கம், பைன்மரக்காடுகள், பில்லர் ராக்ஸ், குணாகுகை, பேரிஜம், மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் இயற்கை அழகினை கண்டு ரசித்தனர்.
மேலும், கொடைக்கானலில் நிலவும் மிதமான வெப்பத்துடன் கூடிய குளுமையான சூழலைஅனுபவித்தவாறு பிரையண்ட் பூங்காவில் உள்ள புல்வெளிகளில் அமர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை சுற்றுலா பயணிகள் கொண்டாடி வருகின்றனர்.