மல்லையா விவகாரத்தில் பிரிட்டன் அரசின் நடவடிக்கைகள் தங்களுக்கு தெரியவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
விஜய் மல்லயா அவர்களை பற்றி அரியதோர் யாரும் இல்லை. கடன் வாங்கி ஏமாற்றியர் என்று சொன்னாலே நமக்கு நியாபகம் வருவது இவர் பெயர்தான். இவர் பல கோடி கடன் வாங்கி கம்பி நீட்டியவர் இவர். இந்தியாவில் உள்ள 13 வங்கிகளில் மொத்தம் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பாக்கி வைத்துள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பிச்சென்று விட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இருப்பினும், சட்ட சிக்கல்கள் காரணமாக, அதில் தாமதம் ஏற்பட்டது.
கிட்டத்தட்ட இவரை அனைவரும் மறந்து போய் விட்டோம். அனால் கடன் கொடுத்தவன் மறக்கவில்லை. இந்நிலையில் மல்லையா விவகாரத்தில் பிரிட்டன் அரசின் நடவடிக்கைகள் தங்களுக்கு தெரியவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உச்ச நீதிமன்றம் அளித்த தகவல் யாதெனில் மல்லையா பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று திரும்ப செலுத்தாததால் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மல்லையாவை இந்தியாவுக்கு திரும்ப அழைத்து வர தூதரகம், சட்ட ரீதியான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. விஜய் மல்லையாவை திரும்ப அனுப்ப இங்கிலாந்து அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்து தெரியாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.