
விஜய் சேதுபதியின் படத்திற்கு வாழ்த்துகள் தெரிவித்த சீனு ராமசாமி .
தென்னிந்திய சினிமாவில் நடித்து வரும் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் க/பெ ரணசிங்கம். இப்படத்தை விருமாண்டி என்பவர் இயக்கியுள்ளார்.
இப்படம் வேறெந்தப் படமும் இல்லாத விதத்தில் இந்தி, தெலுங்கு கன்னடம், தமிழ், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகிறது.
விஜய் சேதுபதியின் படம் இதற்கு இவ்வாறு ரிலீசானதில்லை என்பதால் அவரது ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இப்படத்தில் கவிப்பேரரசு வைரமுத்து ஜிப்ரான் இசையில் எழுதிய பாடல்கள் வைரலாகின.
இந்நிலையில் இப்படம் குறித்து இப்படத்தின் இயக்குநர் சீனுராமசாமிதனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :
மக்கள்செல்வன் விஜய் சேதுபதி அன்புச்செல்வி ஐய்வர்யா ராஜேஷ் நடித்த க/பெ ரணசிங்கம் திரைப்படம் இன்று #ZEE5 இணையவெளிதனில் உலகளாவிய வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.




