திண்டுக்கல்லில் வாக்குப்பதிவு எந்திரங்களை 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், நத்தம், பழனி, ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர் என 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
இந்த பகுதிகளில் 2673 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்காக பயன்படுத்த கட்டுப்பாடு எந்திரங்கள்,
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குகளை உறுதி செய்யும் எந்திரங்கள் ஆகியவற்றை இந்த வாக்குச்சாவடிகளில் அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இதில் முதல் நிலையாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனி அறையில் பத்திரமாக வைக்கப்பட்ட கட்டுப்பாட்டு எந்திரங்கள், வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்கள் ஆகியவற்றை தேர்தல் அதிகாரிகள் சரிபார்த்துள்ளனர்.
இதையடுத்து அந்த இயந்திரங்கள் அந்தந்த பகுதிகளுக்கு எடுக்கப்பட்ட எண்ணிக்கையில் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பின்னர் திண்டுக்கல்லில் அமைக்கப்பட்டுள்ள 2 வாக்குபதிவு மையங்களிலும், வாக்குபதிவு நிறைவடைந்தவுடன் எந்திரங்கள் பத்திரமாக வைக்கப்பட உள்ளதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.