சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு, வினய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் சிவகார்திகேயனிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். இவர் தமிழில் அறிமுகமாகும் முதல் திரைப்படம் இது.
கடந்த மார்ச் மாதம் 26 – ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. அதன் பின் படம் ஓடிடியில் வெளியாகுமா அல்லது திரையரங்குகளில் வெளியாகுமா என்ற குழம்பம் ரசிகர்களுக்கு மத்தியில் நிலவியது.
தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் டாக்டர் திரைப்படம் அக்டோபர் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




