பெரம்பலூரில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 4 இளைஞர்கள் ஆற்றுப் பள்ளத்தில் சிக்கிக் கொண்டுள்ளனர். அங்கு துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்கள் அவர்களை காப்பாற்றியுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்திம் சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி, பவித்ரன், ரஞ்சித், கார்த்திக் ஆகியோர் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது அருகில் உள்ள பள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இளைஞர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கு துணி துவைத்துக் கொண்டிருந்த முத்தம்மாள், ஆனந்தவள்ளி, முத்தமிழ்ச்செல்வி ஆகிய மூவரும் சற்றும் தயங்காமல் தாங்கள் அணிந்திருந்த புடவையால் அவர்களை காப்பாற்ற முயற்சி செய்தனர்.
ஆனால் ரவி மற்றும் கார்த்திக் ஆகிய இருவரை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது. ரஞ்சித் மற்றும் பவித்திரனை காப்பாற்ற முடியவில்லை என வருத்தமடைந்தனர்.
எவ்வளவு கூறியும் அந்த இளைஞர்கள் கேட்காமல் ஆழமான இடத்திற்கு சென்றனர். பிறகு பள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இருவரை காப்பாற்ற முடியாமல் கண் எதிரே உயிர் போனது மிகுந்த வருத்தமளிப்பதாக அப்பெண்கள் தெரிவித்தனர்.




