நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையில் நாட்டின் சில்லறை பணவீக்கம் ஜூன் மாதத்தில் 6.09 சதவீதமாக இருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடைசியாக நடப்பாண்டு மார்ச் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 5.84 சதவீதமாக இருந்தது. கொரோனா தொற்று பரவல் காரணமாக தரவுகளை சேமிக்க இயலாத காரணத்தால், நடப்பாண்டில், ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கான பணவீக்கத்தை மத்திய அரசின் புள்ளிவிவரம் மற்றும் அமலாக்கத்துறை அலுவலகம் வெளியிடவில்லை. தற்போதைய பணவீக்கம், ரிசர்வ் வங்கியின் நடுத்தர கால பணவீக்க இலக்கான 4 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது.
சில்லறை பணவீக்கத்தை தீர்மானிப்பத்தில் இரு மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படும் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை முக்கிய காரணியாக விளங்குகிறது. கொரோனா ஊரடங்கு தொடங்கிய மார்ச் 25ல் இருந்து ரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகிதத்தை ஒட்டுமொத்தமாக 115 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்துள்ளது.