புதுச்சேரி சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக ஆளுநர் உரை தமிழில் இடம்பெற்றுள்ளது. இந்த உரையை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாசித்தார். புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி பதவியேற்ற பிறகு நடைபெற்று வரும் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது.
புதுச்சேரி சட்டப்பேரவை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் இன்று தொடங்கியது. சட்டப்பேரவை வரலாற்றில் ஆளுநர் உரையை தமிழில் வாசிப்பது இதுவே முதன்முறையாகும். புதுச்சேரி மாநில பட்ஜெட் தாக்கல் செய்ய சட்டப்பேரவை காலை 9.30 மணிக்கு கூடியது. சட்டப்பேரவைக்கு வருகை தந்த ஆளுநருக்கு காவல்துறை மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் நடப்பு ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தெலங்கானா ஆளுநரகா உள்ள தமிழிசைக்கு, புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால், அவர் தமிழில் ஆளுநர் உரையை வாசித்தார். இன்று மாலை 4. 30 மணிக்கு புதுச்சேரி மாநிலத்திற்கான பட்ஜெட்டை நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார்.புதுச்சேரி வரலாற்றில் ஆளுநர் உரையாற்றும் அன்றைய தினமே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதும் இதுவே முதல் முறையாக உள்ளது. ஆளுநர் உரையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.