உங்களது காலை எப்படி விடிகிறதோ, அதே போல தான் அந்த நாள் முழுவதும் இருக்கும். உங்கள் காலை பொழுதை இனிமையாகவும், ஆரோக்கியமானதாகவும் தொடங்க கற்றுக் கொள்ளுங்கள்.
அற்புதமான நாள் தொடங்க
காலையில் தாமதமாக எழுந்தால் மன அழுத்தம் ஏற்படும். காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது போன்ற எளிய நடைமுறைகள், நாள் முழுவதும் ஏற்படும் பதற்றத்தை தடுக்கும். இந்த நடைமுறை காலையை வழக்கமாக செயல்படுத்த உதவும். இது போன்ற எளிய நடைமுறையை பழக்கமாக்கி கொண்டால் , நாள் முழுவதும் அமைதியாகவும், அதிக வேலை செய்யும் உத்வேகத்தை கொடுக்கும். உங்கள் அலாரம் அடிக்கும் போதே, அணைத்து விட்டு படுக்கையை விட்டு எழுந்து இன்றைய நாளை தொடங்குங்கள்.
காலையில் மொபைல் போனை பார்க்காதீர்கள்
காலை எழுந்த உடன் மொபைலை தேடாதீர்கள். காலை அலாரம் அடிக்கும் போது, எழுந்து அடுத்த வேளையை பாருங்கள். மொபைல் போன் உங்களுக்கான நேரத்தை எடுத்துக்கொள்ளும்.
காலையில் தண்ணீர் குடிப்பது நல்லது
காலையில் எழுந்த உடன் சிறிது தண்ணீர் குடிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். உடலிலுள்ள நச்சுகளை அவை வெளியேற்றிவிடும். முதல் வேளையாக தண்ணீர் குடிப்பதால், இரத்த வெள்ளையணுக்கள் நோய்த்தொற்றுக்களை எதிர்த்து போராடி, உடலை பாதுகாக்கும். தண்ணீர் குடிப்பதால் உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கப்பட்டு, உடலின் எடை குறையும்.
க்ரீன் டீ
க்ரீன் டீ யில் இருக்கும் ஃப்ளேவினாய்ட், ஆன்டி ஆக்ஸிடென்ட் உடலிற்கு எதிர்ப்பு திறன் அதிகரிக்க்சச் செய்து, நச்சுக்களை வெளியேற்றுகிறது. குடல்களில் தங்கும் கழிவுகளை சுத்தமாக வெளியேற்றுகிறது. காலை நேரத்தை பசுமையான க்ரீன் டீ யுடன் தொடங்கலாம்.
நாளிதழ் படிக்கும் பழக்கம் :
காலை வேளைகளில் புத்தகம் அல்லது நாளிதழ்களை படிப்பது நல்ல பழக்கமாகும். குறைந்தது 1 முதல் 3 பக்கங்களையாவது நாளிதழில் படியுங்கள். இது உங்கள் மூளையை சுறுசுறுப்பாக இருக்க உதவும்.
காட்சிப்படுத்தி பாருங்கள்
கண்ணை மூடி சில நிமிடம் காட்சிப்படுத்தி பாருங்கள். இது நாள்முழுவதும் நம்பிக்கையுடனும், புது உத்வேகத்துடனும் செயல்பட உதவும். மற்றவர்களிடம் திறம்பட தொடர்பு கொள்ளவும் உதவுகிறது. ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யவும் இது பெரிதும் உதவும்.
உடற்பயிற்சி
தசைப்பிடிப்புகளை எடுத்து விடுவது உடலுக்கு நல்லது. மெதுவான முதுகு தசைப்பிடிப்புகளை 4 முதல் 5 சுற்று சுற்றி எடுத்து விட வேண்டும். மேலும் நீண்ட மூச்சுப் பயிற்சியின் மூலம் அந்த நாளை நீட்சி அடைய செய்யலாம். தினமும் காலை இப்படி செய்து வந்தால் உடலில் சீராக ரத்தம் பாய உதவும். காலையி ல் செய்யும் உடற்பயிற்சியும் இரவில் நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது. உடற்பயிற்சி நம்மை புத்துணர்ச்சியுடன் வைத்திருத்திருகிறது.
உற்சாகமாய் இருங்கள்
மெல்லிய இசை யுடன் கூடிய நடனம் உங்கள் காலை பதற்றத்தை தடுக்கும். மெல்லிய இசை காலையில் செய்ய வேண்டிய வேலைகளை சீராய் செய்ய உதவும்.
காலை நேர உணவு
காலை நேரத்தில் உணவை தவிர்ப்பது ஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கும். காலை உணவை முறையாக உட்கொள்பவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு இயல்பாக இருப்பதால், இடையில், பசி தோன்றாது.
காலை நேர ரொமான்ஸ்
உங்களின் தேவையை உங்கள் செயல்பாடுகளே உணர்த்துமே. காலை நேர ரொமான்ஸ் மனைவிக்கு மிகவும் பிடித்தமானது. அன்பாய் ஒரு அணைப்பு, ஆசையாய் ஒரு முத்தம் என தொடங்குங்கள். அன்று உங்கள் நாள் இனிமையாய் தொடங்கும்.