உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்க முடியாதவர்களுக்கு, எளிய பயிற்சிமுறை கீழே வழங்கப்பட்டு உள்ளது.
பரபரப்பான உலகில் கடினமான உடல் உழைப்பு சார்ந்த வேலை செய்யாதவர்கள், ஆரோக்கியத்தை பேண எளிமையான உடற்பயிற்சிகளையாவது சிறிய அளவில் மேற்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.
தனிப்பட்ட முறையில் உடலை வருத்திக்கொண்டு செய்ய வேண்டிய பயிற்சிகளை மேற்கொள்ளாவிட்டாலும், நேரமில்லாத அளவிற்கு பரபரப்பான வாழ்க்கை பின்னணியை கொண்டவர்கள் நாள்தோறும் படிக்கட்டுகளில் ஏறி, இறங்குவது நல்லது.
இந்த பயிற்சியின் போது முழு உடலையும் படிக்கட்டுகளில் தாங்க செய்வதன் மூலம் அடிவயிறு, இடுப்பு, தொடைகள் மற்றும் கால்களில் உள்ள தசைகள் வலுவடையும்.
படிக்கட்டு ஏறுவது இதய நோய்களால் ஏற்படும் இறப்பு அபாயத்தை குறைக்கும் என கூறப்படுகிறது.
படிக்கட்டுகள் ஏறுவது எல்லா வயதினருக்கும் நல்லது. நடைப்பயிற்சி செய்வது அல்லது ஓடுவதை விட படிக்கட்டு ஏறுவதன் மூலம் அதிக உடலில் உள்ள கலோரிகளை அதிகளவில் எரித்துவிடலாம். ஒருசமயத்தில், ஒரே ஒரு படிக்கட்டில் ஏறினாலே 0.17 கலோரிகளும், கீழே இறங்கும்போது 0.05 கலோரிகளும் எரிக்கப்படுவதாக உடற்பயிற்சி வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று கடினமான பயிற்சிகளை செய்வதை காட்டிலும், வாழ்வுடன் ஒன்றியுள்ள இந்த முறையை பின்பற்றுவதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைவதுடன் உடலின் ஆரோக்கியமும் உறுதி செய்யப்படுகிறது.