Tuesday, December 16, 2025
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home லைப் ஸ்டைல்

இளநரையா ? – கவலையை விடுங்க!

October 2, 2021

இளநரை என்றாலே அலர்ஜிதான். இளமையிலேயே தலைமுடி நரைக்கத் தொடங்கிவிட்டாலே அவ்வளவு தான். ஒருவித தாழ்வு மனப்பான்மை, கவலை, வருத்தம் என எல்லாம் தொடங்கி, மனதில் மகிழ்ச்சியையே மறக்கச் செய்துவிடும். மீண்டும் முடியை கருப்பாக்க என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரிடமும் ஆலோசனை கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

உணவுப்பழக்கம் :

டோரோ மெக்கோய் உணவகம் தங்கத்தில் பர்கர் : வைரல் வீடியோ

தள்ளுவண்டி கடைகளில் இனி வாழை இலைதான் பயன்படுத்த வேண்டும் : உணவு பாதுகாப்புத்துறை

உடல் எடை குறைக்க உதவும் உணவுமுறை!

தவறான உணவுப்பழக்கங்கள், உடலில் பல்வேறு ஊட்டச்சத்துக் குறைபாட்டு நோய்கள் உண்டாகவும், சருமம், பல் மற்றும் தலைமுடியை மிக மோசமாகப் பாதிக்கும் காரணமாகவும் அமைகிறது.

வைட்டமின் பி12 குறைபாடு:

குறிப்பாக வைட்டமின் பி12 சத்துக் குறைபாடானது, இளநரையைத் தோற்றுவிக்கும் காரணியாகக் கருதப்படுகிறது. இதனால் உணவில், போதுமான அளவு வைட்டமின் பி12 இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தைராய்டு சுரப்பிகள் சரியாக செயல்படாமல் இருத்தல்:

தைராய்டு சுரப்பிகள் சரியாகக் செயல்படாமல், தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டால், அது இளமையிலேயே தலைமுடி நரைப்பதற்கு ஒரு காரணமாக அமைகிறது. பொதுவாக பெண்களுக்கு தான் தைராய்டு சுரப்பிகள் சரியாகக் செயல்படாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

நீண்டகாலமாகப் புகைப்பிடித்தல் :

இளமையிலேயே தலைமுடி நரைப்பதற்கு நீண்டகாலமாகப் புகைப்பிடித்தலும் ஒரு காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மாசுபாடு :

சுற்றுச்சூழல் மாசு அடைவதால், சருமம் பாதிக்கப்படுவதுடன், நமது தலைமுடியும் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

தலைமுடி பராமரிப்புப் பொருட்கள் :

வண்ணச் சாயங்கள், தலைமுடி ப்ளீச்சிங் பொருள்கள், ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்கள் ஆகியவற்றில் உள்ள ஹைட்ரஜன் பெராக்ஸைடு தலைமுடிக்குக் கேடு விளைவிக்கும். தலைமுடியை, முடிந்தவரை அதன் இயற்கைத்தன்மை பாதிக்கப்படாமல் பராமரித்து வர வேண்டும்.

மன அழுத்தம்

எப்போதும் வேலை வேலை என்று அலைபவரா? பணிச்சுமையின் காரணமாக மன அழுத்தத்திகு ஆட்படுபவரா? நெடுங்காலமாக மன அழுத்தத்துடன் வாழ்பவரா? அப்படியெனில் அதற்கு விலையாக தலைமுடியின் நலனை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும்.

டூத் பேஸ்ட் :

பற்களை வெண்மையாக்கும் பொருள்களில் உள்ள ஹைட்ரஜன் பெராக்ஸைடு அதிகமாகப் பயன்படுத்தப்படும் பொழுது, அது இளநரையை உண்டாக்குகிறது.

பரம்பரை :

இளநரைக்கு பரம்பரையும் ஒரு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு நம்மால் தீர்வு ஏதும் சொல்ல முடியாது.

இளநரை பிரச்சனையிலிருந்து தப்பிக்க வழிகள் :

#நரை முடியை முற்‌றிலும் ஒழிக்க கறிவேப்‌பிலையை உணவில் சேர்‌த்துக் கொண்டால் போதும்.

#குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் தேங்காய் எண்ணையை நன்கு தலையில் தேய்த்து மஜாஜ் செய்ய வேண்டும். பின்னர் தலையை தேய்த்து குளிக்க வேண்டும். இப்படி செய்து வந்தால்  நல்ல அடர்தியான கருநிற முடியை பெற முடியும்.

#தலைக்கு குளித்த சில நிமிட நேரத்தில் தலைக்கு எண்ணெய் தேய்க்க கூடாது. தலைக்குக் குளித்ததும் ஈரம் காய்வதற்கு முன்பே எண்ணெய் வைப்பதால்தான் பலருக்கு செம்மட்டை நிறத்தில் முடி வளர்கிறது. அதோடு முடு அதிகம் கொட்டவும் செய்கிறது. இதனால் முளைக்கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால் நரை முடி கருப்பாக மாறும்.

#முருங்கைகீரையில் இரும்புச் சத்தும், கால்சியமும் அதிகமாக உள்ளது.இதனால் முருங்கைகீரையை வாரம் இரு முறை உணவில் சேர்த்துக்கொண்டால் முடி உதிர்வது நிற்பதுடன் நீளமாக வளரும்.

 #மருதாணி இலையை நன்கு மைபோல் அரைத்து, அதில் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறையும், வெந்தயம் பவுடர் இரண்டு ஸ்பூன் கலந்து கொள்ள வேண்டும். இக்கலவையை முதல் நாள் இரவே செய்து கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும், இக்கலவையை அனைத்து முடிகளிலும் படும்படி நன்றாக தேய்த்து இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஊறவைத்து பிறகு சிகைக்காய்த்தூள் தேய்த்து நல்ல தண்ணீரில் கழுவ வேண்டும். குறிப்பாக மருதாணியை போடுவதற்கு முன், தலையில் எண்ணெய் பசை இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். இப்படி செய்து வந்தால் இளநரை மறையும்.

#பித்தம் அதிகமுள்ளவர்கள் காபி, டீ குடிக்கும் பழக்கம் இருந்தால்  படிப்படியாக குறைத்து விடுவது நல்லது.

#நெல்லிக்காய் 5, மருதாணி இலை, கறிவேப்பிலை தலா ஒரு கைப்பிடி, 2 லவங்கம் இவற்றைத் தனித்தனியே அரைத்துச் சாறெடுத்து ஒன்றாகக் கலக்குங்கள். இதனுடன் 3 டேபிள்ஸ்பூன் கடலை மாவு சேர்த்து தலையில் பூசி அரை மணி நேரம் கழித்து தண்ணீர் விட்டு அலசுங்கள். வாரம் ஒரு முறை இதுபோல் செய்துவந்தால், இளநரை நெருங்காது.


#இரும்புச் சத்து அதிகம் உள்ள பேரீச்சைப் பழத்தை அதிகம் சாப்பிட  வேண்டும்.

# பசுவெண்ணெய்க்கு இளநரையை மாற்றும் தன்மை இருக்கின்றது. தினமும் பசு வெண்ணையைச் சிறிது சாப்பிட்டு வரவேண்டும். வெண்ணையைத் தலை கால்களில் அழுத்தித் தேய்த்து வந்தாலும் இளநரை மாறும்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றாரு – சீமானை வம்புக்கு இழுத்த அமைச்சர் பெரிய கருப்பன்

Next Post

உலக காபி தினம் – கொஞ்சம் காபி … கொஞ்சம் வரலாறு

Next Post
Close up white coffee cup with heart shape latte art on wood table at cafe.

உலக காபி தினம் - கொஞ்சம் காபி … கொஞ்சம் வரலாறு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025

புதிய உதயம்; திராவிட வெற்றிக் கழகம்!

November 20, 2025

தூய்மைப்பணியாளர்களுக்கு ஆதரவாக திலகபாமா!

November 20, 2025

மீண்டும் பரப்புரையைத் தொடங்கும் விஜய்!

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version