தேவையான பொருட்கள்:
தூதுவளை இலைகள்
பூண்டு 5 பல்
இஞ்சி தோல்சீவியது
கறிவேப்பிலை
கொத்தமல்லி
புதினா
மிளகுதூள்
துளசி இலைகள்
எலுமிச்சை சாறு 2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம்
செய்முறை:
சின்னவெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.பின்பு வாணலியில் தூதுவளை இலைகள், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, நறுக்கிய சின்ன வெங்காயம், கொத்தமல்லித்தழை, புதினா & துளசி இலைகளுடன் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து கொதிக்க விடவும். பிறகு இதை வடிகட்டி மிளகுதூள், எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கினால் தூதுவளை சூப் ரெடி. இது சளி, இருமலை நீக்கக்கூடியது. இரைப்பு தொல்லையினை குணமாக்கக்கூடியது.