தேவையான பொருட்கள்:
வெங்காயம்
அரிசி மாவு
கடலை மாவு
ஓமம்
மிளகாய்தூள்
செய்முறை:
வெங்காயத்தை தோல் நீக்கி வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு போட்டு அதனுடன் ஓமம், மிளகாய்தூள், உப்பு சேர்த்து நீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் கொதிவந்ததும், வெங்காய துண்டுகளை மாவில் பிரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான வெங்காய பஜ்ஜி ரெடி. இதை தேங்காய் சட்னியுடன் தொட்டு சாப்பிட்ட நாக்கில் சுவை இருந்து கொண்டே இருக்கும்.