தேவையான பொருட்கள்:
அரிசி 6 பங்கு
உளுந்து மாவு 1 பங்கு
(அரிசி,உளுந்து 6:1 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும்)
எள்ளு 1 டீஸ்பூன்
வெண்ணெய் 50 கிராம்
உப்பு (தேவையான அளவு)
பெருங்காயம் – 1 டீஸ்பூன்
செய்முறை:
வாணலியில் அரிசிமாவை 5 நிமிடம் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் உளுந்துமாவு, உப்பு, எள்ளு, வெண்ணெய், பெருங்காயம் சேர்த்து நன்றாக கலக்கவும்.பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசையவும்.(தளர பிசைய வேண்டாம்) சீடை வெடிக்காமல் இருக்க ஒரு துணியில் சிறு உருண்டைகளாக உருட்டி போடவும்.பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் (அதிக சூடு இல்லாமல்) சீடையை போட்டு பொரித்து எடுத்தால் மொறுமொறுப்பான சீடை ரெடி.
குறிப்பு: சீடை உருட்டும்போது கையில் எண்ணெய் அல்லது நெய் தேய்த்து லேசாக உருட்டவும். இப்படி செய்வதால் சீடையில் விரிசல் விடாது.பொரிக்கும்போது வெடிக்கவும் வெடிக்காது. அரிசியை போல உளுந்தை ஒரே சீராக வறுத்து பின் மாவாக அரைத்துக் கொள்வது அவசியம்.