தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய் – 2 கப்,
பால் (கொதிக்கை வைத்து ஆறிய பால்)- 2 ½ கப்,
சர்க்கரை
முந்திரி
நெய்
செய்முறை:
வாணலியில் சிறிது நெய் விட்டு அதில் முந்திரியை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின் துருவிய தேங்காயை போட்டு பொன்னிறமாக வதக்கவும். அடுத்து, அதில் கொதிக்க வைத்து குளிர வைத்த பாலை ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைக்கவும். பாலானது சுண்டி நீரின்றி போகும் நிலையில் சர்க்கரையை சேர்த்து தொடந்து கிளறி விடவும். கெட்டிப்பதம் வரும்வரை விடாமல் கிளற வேண்டும். தேவையெனில், இடை, இடையே அவ்வப்போது நெய் சேர்த்துக் கொள்ளலாம். கடைசியாக கலவை அல்வா போன்று திரண்டு வரும்போது வறுத்த முந்திரியுடன், சிறிது உப்பை தூவி, எஞ்சிய நெய்யை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான தேங்காய் அல்வா ரெடி. தேங்காய் என்பதால் இதற்கு அதிகமாக நெய் தேவைப்படாது.