☛திருமணமாகப்போகும் பெண்கள் மூன்று மாதத்திற்கு முன்பே சரும பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

☛தினமும் காலை & மாலை இரண்டு வேளைகளிலும் ரசாயனம் அதிகம் சேர்க்காத சோப்பை பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும். பின்பு டோனர் அல்லது ரோஜா பன்னீரை பஞ்சில் நனைத்து முகம் முழுவதும் துடைக்கவும்.
☛தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
☛நார்ச்சத்து அதிகம் நிறைந்த பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம் உடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் நீங்கி முகம் பளிச்சிடும்.
☛தண்ணீரில் ஊறவைத்த கொண்டைக்கடலையுடன் தேங்காய் எண்ணெய் கலந்து கொரகொரப்பாக அரைத்து அதனை முகத்தில் தடவி 5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யவும். இதனால் இறந்த செல்கள் அகன்று புதிய செல்கள் உண்டாகும்.

☛கண்ணுக்கு கீழே கருவளையம் இருப்பவர்களுக்கு இரவு நேரத்தில் 8 மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் அவசியமாகும்.
☛இதனை நீக்க கற்றாழை ஜெல்லை கண்களை சுற்றி தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.
☛திருமணத்துக்கு தயாராகும் மணப்பெண்கள் அனைவருக்கும் சந்தோஷம், பரபரப்பு, எதிர்பார்ப்பு, குழப்பம் என பல்வேறு உணர்வுகள் கலந்த மனநிலையில் இருப்பார்கள். இருப்பினும் மன அழுத்தம் இருக்கக் கூடாது.




