இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு பெண்களுக்குமே தான் தாய்மை என்ற நிலையை அடையும் போது கிடைக்கும் சந்தோஷம் வேறெதிலும் இல்லை. சில பெண்கள் எளிதில் தாய்மை என்ற நிலையை அடைந்து விடுகின்றனர்.சில பெண்கள் பல சிக்கல்களையும்,சவால்களையும் தாண்டி தாய்மை என்ற நிலையை அடைகின்றனர்.
அப்படி தாய்மை என்ற நிலையை அடைவதற்காக கர்ப்பத்திற்கு முயற்சிக்கும் ஓவ்வொரு பெண்ணும் தன் உடலுக்குள் நடக்கும் இயற்கையான நிகழ்வான கருமுட்டை கருப்பையை வந்தடையும் நாளைப் பற்றித் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். பெண்களுக்கு மாதத்திற்கு ஒருமுறை கருமுட்டை உருவாகும், அந்த கருமுட்டை 24மணி நேரம் மட்டுமே கருப்பையில் தங்கி இருக்கும். அந்த நாளை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் எளிதில் கர்ப்பமடையும் வாய்ப்பு அதிகம்..
ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் சுழற்சி தோராயமாக முப்பது நாட்கள் என்று வைத்துக் கொண்டால் மாதவிடாய் தொடங்கி பன்னிரெண்டாம் நாளிலிருந்து பதினாறாவது நாளிற்குள் எப்போது வேண்டுமானாலும் அந்த பெண்ணின் உடலுள் கருமுட்டை பெரிதாக உருவாகிகருப்பையில் தயாராக இருக்கும். இந்த கருமுட்டையானது கருப்பையில் தங்கி இருக்கும் அந்த 24 மணி நேரத்திற்குள் ஆணின் உயிரணுவுடன் சேரும்பொழுது கரு உருவாகிறது.
அப்படி இல்லையென்றால் கருமுட்டையானது 24மணி நேரம் கழித்து வெடித்து அப்பெண்ணின் உடலை விட்டு வெளியேறிவிடும். அந்த கருமுட்டை பெண்ணின் உடலைவிட்டு வெளியேறிய பின்பு அந்த மாதத்தில் அவள் கர்ப்பமாவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. அதற்குப் பின் அடுத்த மாதம் தான் இன்னொரு கருமுட்டை உருவாகும் .(சில பெண்களுக்கு அபூர்வமாக இரண்டு கருமுட்டைகள் கூட உருவாகும்; ஆனால் அது அரிதாக நடக்கக் கூடிய ஒன்றுதான்)
இப்படி கருமுட்டை பெரிதாக உருவாகி கருப்பையை வந்தடையும் நிகழ்வைத்தான் ஆங்கிலத்தில் ovulation என்று சொல்வார்கள். பெண்கள் கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொள்வதற்கு pregnancy kit என்று ஒன்று இருப்பதைப் போல்; கருமுட்டை உடலுக்குள் உருவாகிவிட்டதா என்பதைத் தெரிந்து கொள்வதற்கு ovulation kit என்ற ஒன்று உள்ளது. அதனை பயன்படுத்தும் முறை pregnancy kit பயன்படுத்தும் முறையை ஒத்ததே.
அதாவது ஒரு பெண்ணின் மாதவிடாய் ஆரம்பித்த நாளில் இருந்து கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். பதிமூன்றாவது நாளில் இருந்து பதினேழாம் நாள் வரை எப்போது வேண்டுமானாலும் அவளது கருப்பையில் கருமுட்டை உருவாகி வெளியேறும். நான் குறிப்பிட்ட இந்த நான்கு நாட்களில் காலை எழுந்தவுடன் கர்ப்பத்திற்பாக நாம் பரிசோதிக்கும அதே சிறுநீர் பரிசோதனை முறையை இந்த ovulation kit வைத்து செய்து பார்க்க வேண்டும்.
இந்த நான்கு நாட்களில் ஏதோ ஒரு நாள் இரண்டு கோடுகள் வரும். அப்படி இரண்டு கோடுகள் வந்தால் உங்கள் கருப்பையில் கருமுட்டை உருவாகி தயாராக உள்ளது என அர்த்தம். அந்த இரண்டு கோடுகள் வந்த நாளிலிருந்து தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நீங்கள் கர்ப்பமாவதற்கான வாய்ப்பு உச்சத்தில் இருக்கும் நாட்கள். நீங்கள் அந்த நாட்களை சரியாக பயன்படுத்தினால் எளிதாக கர்ப்பமடைந்துவிடலாம்.
கர்ப்பத்திற்கு முயற்சிக்கும் ஒவ்வொருவரும் இந்த ovulation kit அவசியம் வீட்டில் வைத்திருக்க வேண்டும். இதனால் நீங்கள் கருமுட்டை வெளியாகும் நாளைச் சரியாகத் தெரிந்து கொண்டு கர்ப்பமாகும் வாய்ப்பை அதிகப்படுத்தலாம்..
சரியாக முப்பது நாட்கள் மாதவிடாய் சுழற்சி உள்ள பெண்களுக்கு பதினான்கு அல்லது பதினைந்தாவது நாளில் கருமுட்டை பெரிதாக உருவாகித் தயாராக இருக்கும். ஆதலால் அந்த நாட்களில் ovulation kit-ல் இரண்டு கோடுகள் காட்டும்.
மாதவிடாய் சுழற்சி முப்பத்தைந்து நாட்கள் இருக்கும் பெண்களுக்கு பதினேளாவது நாள் அல்லது பதினெட்டாவது நாளில் தான் கருமுட்டை உருவாகி வெளியாகும்.அதனால் அப்போதுதான் ovulation kitல் இரண்டு கோடுகள் காட்டும்.நீங்கள் அதற்கேற்றார் போல் ovulation kit வைத்து சோதனை செய்து கொள்ளலாம்.
சரியாக மாதவிடாய் வருகிறது ஆனால் கர்ப்பமாகவில்லை என்றால் அப்பெண்களுக்கு நிச்சயம் இந்தக் கருவி மிகவும் உபயோகமாக இருக்கும்.பொதுவாக மாதவிடாய் ஆரம்பித்து பத்து நாட்களிலிருந்து இருபது நாட்கள் வரைதான் கர்ப்பத்தின்கான வாய்ப்பு அதிகம் என்பது அனைத்துப் பெண்களும் அறிந்தததே;ஆனால் கருமுட்டை வெளியாகும் அந்த ஒருநாளை சரியாகக் கணக்கிட்டு அந்த நாளைத் தவரவிடாமல் இருப்பதற்காக இந்த ovulation kit பயன்படுத்தலாம்.
கர்ப்பத்திற்கு முயற்சிக்கும் பெண்கள் ஒவ்வொருவருக்கும் இந்த ஓவுலேஷன் கிட் கருவி உதவிகரமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.