உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு மயோனஸ் எதிரி என்றே சொல்லலாம்,ஏனெனில் சாண்ட்விட்ச், பர்கர், சிக்கன் பார்பிக்யூ, க்ரில் சாப்பிட பயன்படுத்துவதால் உடல் ஆரோக்கியம் கெடுகிறது.
மயோனஸை வீட்டிலேயே எளிதாக செய்யலாம்.மயோனஸ் தயாரிக்க முட்டை வெள்ளைக்கரு, எண்ணெய் , சர்க்கரை, உப்பு , எலுமிச்சை சாறு போன்ற மூலப்பொருட்கள் பயன்படுத்தி மிக்ஸியில் அரைத்து தயாரிக்கப்படுவதாகும். அப்படி தயாரிக்கப்படும் மயோனைஸ் பாக்டீரியாக்கள் இனப்பெருக்கம் செய்ய ஏதுவான உணவுப் பொருளாக மாறுகிறது.
எண்ணெய் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதால் அதிக கொழுப்பு சத்து உள்ளது. ஒரு ஸ்பூன் மயோனைஸ் 94 கலோரிகளைக் கொண்டதாம். எனவே இது உடலில் கலோரி அளவை கண்ணுக்கே தெரியாமல் அதிகரித்துவிடும். எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு மயோனைஸ் எதிரி என்றே கூறப்படுகிறது.
இதற்கு மாற்று வழி குறைந்த கொழுப்பு கொண்ட மயோனைஸும் கிடைக்கின்றன. ஆனால் அது சுவை சற்று குறைவாக இருக்கும். இருந்தாலும் உடல் எடைக் குறைக்க நினைப்போருக்கு இது ஏற்றது. இருப்பினும் இதுவும் ஆபத்துதான் என்றே மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.