நம்மூரில் எல்லோருக்கும் எளிதாகக் கிடைக்கும் பழம் பப்பாளி! எளிதாகக் கிடைப்பதால் என்னவோ நம்மக்களுக்கு அதன் அருமை தெரிவதில்லை! வெப்ப மண்டலப் பகுதிகளில் அதிகமாகக் கிடைக்கக்கூடிய இந்தப் பப்பாளியானது, பல்வேறு வகையான மருத்துவப் பயன்களைக் கொண்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?! தெரிந்து கொள்ளுங்கள்!!
செரிமானத்தற்கு உதவுகிறது!
பப்பாளிப் பழத்தில் உள்ள ‘பப்பைன்‘ என்ற என்சைம் செரிமானத்திற்கு உதவுகிறது. இதில் உள்ள நார்ச் சத்தானது ஜீரணசக்தியை அதிகரித்து ஜீரண மண்டலத்தை சீராக இயங்க வைக்கிறது!
குடற்புழுக்களை அழிக்க உதவுகிறது!
பப்பாளியைத் தொடர்ச்சியாக சாப்பிட்டு வரும்போது நம் உடலில் காயங்கள் எதுவும் இருந்தால்கூட அது விரைவாக ஆறிவிடும். அதோடு மட்டுமல்லாமல், பப்பாளியில் உள்ள வேதிப்பொருட்கள் குடல் புழுக்களைக் கூட அழிக்கும் தன்மை உடையது.
தோல் சார்ந்த பிரச்சனைகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது!
பப்பாளியில் உள்ள வேதிப்பொருட்கள் மற்றும் வைட்டமின்கள் தோல் சார்ந்த பிரச்சனைகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. அதிலுள்ள ‘லிகோபின்‘ என்ற நொதியானது தோல் சுருக்கம் வராமல் பாதுகாக்க உதவுகிறது. அதுமட்டும் இல்லாமல் நம் தொலைப் பளபளவென்று வைத்துக்கொள்வதற்கும் உதவுகிறது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
பப்பாளியை நாம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி எந்த ஒரு நோய்க்கிருமிகளையும் அண்டவிடாமல் நம்முடலைப் பாதுகாத்துக்கொள்ளும்.
கண் பார்வைக்கு நல்லது!
பப்பாளியில் உள்ள ‘வைட்டமின் எ‘ மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நம் உடலை வலுப்பெறச்செய்வதோடு மட்டுமில்லாமல, நம்முடைய கண்பார்வைக்கும் நல்லது.
எனவே மக்களே நம்மூரில் எளிதாகக் கிடைக்கும் பப்பாளியைக் குறைத்து மதிப்பிடாமல் தினமும் உண்போம்! கண்பார்வையைக் கூர்மையாக்கி ஒளிமயமான எதிர்காலத்தைப் பெறுவோம்!