Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home லைப் ஸ்டைல்

கற்றாழையில் இவ்வளவு நன்மைகளா!!

August 15, 2020
கற்றாழை கடவுள் நமக்குக் கொடுத்த, ஒரு மருத்துவக் குணம் நிறைந்த, உடலின் பல்வேறு பிரச்சனைகளையும் சரிசெய்யக்கூடிய, பல்வேறு அழகு நன்மைகளையும் உள்ளடக்கிய ஒரு மிகச்சிறந்தப் பொருள். உச்சி முதல் பாதம் வரை நம்மை அழகுப்படுத்திக்கொள்ளவும், உடலை பராமரிக்கவும் உதவும் ஒரே பொருள் என்றால், அது கற்றாழை தான்.அதன் நன்மைகளை இந்தப் பகுதியில் தெரிந்துக்கொள்ளலாம்.

கற்றாழையின் பலனை ருசித்தவர்கள் அனைவருமே, எந்தவிதமான பக்கவிளைவும் இன்றி ஆரோக்கியமான முறையில் அழகை அதிகரிக்க இதை விட வேறு ஒரு சிறந்தப் பொருள் எதுவுமே இல்லை என்கிறார்கள்.அதனால் தான் நிறைய அழகு பொருட்களில் கற்றாழையின் ஜெல் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதிலுள்ள குளிர்ச்சித் தன்மை, சருமம் மற்றும் கூந்தலில் ஏற்படும் பிரச்சனைகளை விரைவில் மறையச் செய்கிறது.

இது நமக்குப் பல வகைகளில் உதவுகிறது.இதன் பயன்களில் சிலவற்றை பார்க்கலாம்.

பதற வைக்கும் பஞ்சுமிட்டாய்

புற்றுநோயாளிகளுக்கு நற்செய்தி… மத்திய அரசு அளிக்கும் நிதி!!

புற்றுநோய் பாதித்த குழந்தைகளுடன் சிம்பு!!

கூந்தல் பிரச்சனை

ஒட்டுமொத்த கூந்தல் பிரச்சனைக்கும் தீர்வளிக்கும் ஒரே பொருள், அது கற்றாழை மட்டும்தான். கற்றாழையில் இருக்கும் முட்களை நீக்கி, தோலை சீவி உள்ளிருக்கும் ஜெல்லை எடுத்து, தலையின் வேர்ப்பகுதிகள், நுனிகள் என அனைத்துப் பகுதியிலும் தேய்த்து, ½ மணி நேரம் ஊற வைத்தி பின்பு கூந்தலை அலச வேண்டும்.இப்படி மாதம் இருமுறை இதே போல செய்து வந்தால் ஒட்டுமொத்த கூந்தல் பிரச்சனைகளும் காணாமல் போய்விடும்.

சருமப் பிரச்சனை

மேலும் இந்த ஜெல்லை கண்கள், உதடுகள், கழுத்தின் பின்புறம், கை, கால் உள்ளிட்ட இடங்களில் தேய்த்து வந்தால், அனைத்து இடங்களிலும் இருந்த கருமை போயே போச்சு என்று சந்தோஷப்படுவீர்கள்.

கற்றாழையில் உள்ள ஜெல்லை எடுத்து, மேலே குறிப்பிட்டுள்ள பகுதிகளில் தடவி வர, அந்தந்த பகுதிகளில் இருக்கும் கருமை மறைவதை நீங்களே காண முடியும்.

நகங்கள்

கற்றாழை ஜெல்லை நகங்களுக்கு மேலேயும், உள்ளேயும் தடவி வர, நகங்கள் வலிமையடையும்.நகங்கள் உடைகின்றதே என்ற கவலை இனி உங்களுக்கு வேண்டாம்.

முகத்திற்கு

கற்றாழை மற்றும் எலுமிச்சை சாறை முகத்தில் தடவ, தழும்புகள் நீங்கி, முகப்பருக்கள் வேருடன் அழியும். மேலும் கற்றாழை, முகப்பரு, முகத்தில் வரும் கட்டிகள், தழும்புகள், சரும சுருக்கங்கள் போன்ற அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மிகச்சிறந்த தீர்வாகக் கருதப்படுகிறது.

மாதவிடாய் பிரச்சினைகள்

இன்றைய காலகட்டத்தில் பல பெண்களின் மிகப்பெரிய பிரச்சனையாக, காலம் தவறிய மாதவிடாய் (Irregular periods), மற்றும் கர்ப்பப்பையிலோ அல்லது சினைப்பையிலோ நீர்க்கட்டி (PCOS – Polycystic ovary syndrome) காணப்படுகின்றன. இதனால் உடல் எடை அதிகரிப்பு, தைராய்டு எனப் பலப் விளைவுகள். இதுபோன்ற ஒழுங்கற்ற மாதவிடாயினால், குழந்தை பெறுவதிலும் சிக்கல் வருகிறது.

இதற்கு, கற்றாழையை, தேங்காய்ப் பால், பனங்கற்கண்டு, ஏலக்காய் சேர்த்து சாப்பிட்டு வந்தால், கொழுப்பின் அளவுக் குறையும்.அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் நிரந்தர தீர்வும் கிடைக்கும்.

மேலும், இது முதுமை தோற்றத்தைத் தடுக்கும், கொழுப்பு மற்றும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.கற்றாழையில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியானது புற்று நோயை உருவாக்கும் செல்களை அழிக்கும் தன்மையுடையது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் அதிகாரபூர்வ ஸ்பான்சராக ஐநாக்ஸ் லீசர் நிறுவனம் ஒப்பந்தம்!!

Next Post

மூன்று கொரோனா தடுப்பூசிகள் சோதனையில் உள்ளன விரைவில் வெளியிடப்படும்: பிரதமர் மோடி!!

Next Post

மூன்று கொரோனா தடுப்பூசிகள் சோதனையில் உள்ளன விரைவில் வெளியிடப்படும்: பிரதமர் மோடி!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version