ராஷ்மிகா மந்தனாவின் சிவப்பு நிற லெஹங்கா அணிந்த புகைப்படங்கள் வைராகியுள்ளன.

சமீபத்தில் புதுடெல்லியில் நடந்த இந்திய கலாச்சார வாரம் 2022-ல் முதல்முறையாக ராஷ்மிகா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஆடை வடிவமைப்பாளர் வருண் பால் தயாரித்த சிவப்பு வண்ண லெஹங்காவுடன் வலம் வந்தார். இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், ”சிவப்பு ஜெஹங்கா அணிந்து வரும்போது வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்தன. சிவப்பு கம்பளத்தின் மீது ஸ்டைலாக நடக்க முயன்றேன், பலன் தரவில்லை. புன்னகையுடன் கடந்து விட்டேன்” என்று கூறினார். சமூக வலைதளத்தில் வலம் வரும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெறிக்கவிட்டு வருகின்றனர்.



-பா.ஈ.பரசுராமன்.




