வருஷம்16 பட கதாநாயகி குஷ்பு இப்பவும் இளமையாக இருக்கிறதுக்கு இதுதான் காரணம் போல என அவர் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்ளை கண்ட ரசிகர்கள் வியப்புடன் பார்த்துவருகின்றனர்.
தமிழ்சினிமாவில் 90களில் இளைஞர்களின் மனதில் கனவுக்கண்ணியாக வலம் வந்தார் குஷ்பு. வருஷம் 16 படத்தில் அறிமுகமான இவருக்கு ரசிகர்கள் கோவில் கட்டிய சுவாரஸ்யங்களும் நிகழ்ந்துள்ளது. தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இரு குழந்தைகளை பெற்றபோதும் இந்த வயதிலும் மிகவும் கடினமான யோகா ஆசனங்களை இந்த வயதிலும் அசால்ட்டாக செய்துள்ள புகைப்படங்களை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து இவரின் இளமைக்கு இதுதான் காரணமோ என ரசிகர்கள் வியந்து பார்த்துவருகின்றனர்.