சின்னத்திரை நடிகை ஆலியா மானசா தனது மகளுடன் எடுத்துக் கொண்ட ப்ரோபஷனல் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
சின்னத்திரையின் ராஜா ராணியாக வலம் வருபவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா ஜோடி. இவர்கள் பிரபல தொலைக்கட்சித் தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் போது காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
சமூக வலைத்தளங்களில் ஆலியா மற்றும் சஞ்சீவுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவர்களுக்காக ரசிகர்கள் பல பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கங்களையும் உருவாக்கி உள்ளனர். இந்த அழகிய காதல் ஜோடிக்கு கடந்த மார்ச் மாதம் அய்லா என்ற பெண் குழந்தை பிறந்தது.
தற்பொழுது அய்லாவுக்கும் ரசிகர்கள் அதிகமாகிவிட்டனர். ஆலியா மற்றும் சஞ்சீவும் தங்களது ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் அடிக்கடி அய்லாவின் புகைப்படங்களையும் விடீயோக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த வகையில் ஆலியா தனது மகளுடன் எடுக்கப்பட்ட ப்ரொபசனல் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
ராஜா ராணி தொடருக்குப் பிறகு சஞ்சீவ் தற்போது காற்றின் மொழி என்னும் சீரியலிலும் ஆலியா மானசா ராஜா ராணி 2 என்னும் சீரியலிலும் நடித்து வருகின்றனர்.