தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தேர்தல் அறிக்கை குழுவின் முதல் கூட்டம் வரும் புதன்கிழமை அணணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.

தேர்தல் அறிக்கை குழு
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தி.மு.க.வின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு நேற்று அமைக்கப்பட்டது. இந்த நிலையில், தேர்தல் அறி்க்கை குழுவின் ஒருங்கிணைப்பாளர், அக்குழுவிற்கான முதல் கூட்டத்திற்கு குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக, அவர் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
முதல் கூட்டம்
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுக் கூட்டம் வருகிற அக்டோபர் 14-ந் தேதி புதன்கிழமை காலை 9 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில்’ நடைபெறும். அதுபோது தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




