காபூல் விமான நிலையத்தில் வியாழக்கிழமை தற்கொலைப்படை தாக்குதல் நடந்த நிலையில் பலி எண்ணிக்கை 95ஆக அதிகரித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே வியாழக்கிழமை குண்டுவெடிப்பு நடந்தது. இந்த சமபவம் நடப்பதற்கு முன்பே காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் விரைவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்றும் பலரும் யூகித்து மேலும் மேற்கத்திய நாடுகள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதில் பலரும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சில சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மேலும் சிலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இன்னும் சிலர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர்.
இவ்வாறாக இந்த தாக்குதல் சம்பவத்தில் பலியானர்களின் எண்ணிக்கை 95ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 150க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
முன்னதாக ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து அந்நாட்டிலிருந்து மக்கள் அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.